நாமலிடம் சிஐடி விசாரணை!

editor 2

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யவே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை சி.ஐ.டி முன் ஆஜராகியுள்ளார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர், சி.ஐ.டி முன் ஆஜராவது இப்போது தனக்கு ஒரு வழக்கமான நிகழ்வாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Share This Article