நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் நான்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் சிறிய நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் மே 8 வரை பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் 605 பொலிஸ் நிலையங்களுக்குத் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.