மகன் தாக்கியதில் தாய் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

மகன் தாக்கியதில் தாய் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

editor 2

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்த தாய் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 65 வயது மதிக்கத்தக்க தாய் உயிந்துள்ளார்.

இதையடுத்து குறித்த மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share This Article