தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

editor 2

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் இன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று முடியும்வரை அவர்களின் விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை இடம்பெறுவதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் விசேட தினமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share This Article