முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு – பொரளையில் நடைபெற்றபோது இனவாதிகள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
பொரளை கனத்தை சுற்றுவட்டத்துக்கு அருகில் அருட்தந்தை சக்திவேல் தலைமையில் காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இதில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சில குழுவினர் அங்கு குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ‘புலிகளை நினைவுகூர வேண்டாம்’ என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இருந்தபோதிலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.