2025 உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான கொள்கைகள் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஒரு பொதுவான ஒருமித்த கருத்து இதன் போது
எட்டப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்தக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.