2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களிலும் பரவலாக நடைபெற்றுள்ளன.
பிரித்தானியாவில் லண்டன் மாநகரில் நடைபெற்ற நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் திரண்டு நீதிக்காக குரல் எழுப்பினர்.
முன்னதாக முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளிப்படுத்தும் வகையிலான கஞ்சி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.



