உணர்வு பூர்வமாக நடைபெற்றது நினைவேந்தல்! (படங்கள்)

editor 2

ஈழத்தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்ததை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த அருட் தந்தை லியோ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சம நேரத்தில் சுடர்களை மக்கள் ஏற்றினர். அதன் பின்னர் பிரகடன உரை வாசிக்கப்பட்டது.

பிரகடன உரையினை அகத்தியர் அடிகள் வாசித்தார்.

இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

Share This Article