வடக்கு, கிழக்கில் அதிக வெப்பம்!

வடக்கு, கிழக்கில் அதிக வெப்பம்!

editor 2
Background for a hot summer or heat wave, orange sky with with bright sun and thermometer

வடக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவுகிறது. இது விடயத்தில் பொதுமக்கள் அவதானமாக செயல்படவேண்டும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு அதில்,
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை,
மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்ப நிலை கவனம் செலுத்தவேண்டிய நிலையை அடைந்துள்ளது.

எனவே,

பொதுமக்கள் போதுமானளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் கவனம் எடுக்கவும் கடும் உடலுழைப்பு சார் வேலைகளை குறைக்கவும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள் என்றுள்ளது.

Share This Article