யாழில் விபத்து; முதியவர் பலி!

யாழில் விபத்து; முதியவர் பலி!

editor 2

ஓட்டோ மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீர்வேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சந்திரராசா (வயது – 72) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 14 ஆம் திகதி அச்சுவேலியிலிருந்து நல்லூர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த வேளை பின்னால் வந்த ஓட்டோ அவரது துவிச்
சக்கர வண்டியில் இருந்த ஊன்றுகோல் மீது தட்டியது.

இதன் போது, குறித்த முதியவர் வீதியில் விழுந்து படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.

இதன்பின்னர் 26 ஆம் திகதி அவருக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட போது மீண்டும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share This Article