மட்டக்களப்பில் ஆஸி.குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் ஆஸி.குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தவரின் சடலம் மீட்பு!

editor 2

மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற 71 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் கடந்த மாதம் அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்து வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். 

அதன்போதே அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article