ஊழல் எதிர்ப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

ஊழல் எதிர்ப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி!

editor 2

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்திட்டத்தை இந்த வருடம் முதல் 2029 ஆம் ஆண்டுவரை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விடயங்களை விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடருவதுடன், நாடளாவிய ரீதியில் அவற்றை ஒழித்தல் போன்றவை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகளாக உள்ளன. 

தற்போதைய அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது இலங்கையை விழுமிய ரீதியான அபிவிருத்தி மட்டத்துக்கு உயர்த்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. 

தற்போது, அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி பலம்வாய்ந்த ஊழல் எதிர்ப்பு கொள்கையைத் தயாரித்து அமுல்படுத்த வேண்டிய தேவைகுறித்து கண்டறியப்பட்டுள்ளது. 

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கையில் கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான முதலாவது தேசிய செயற்திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்டது. 

மீண்டும் குறித்த தேசிய செயற்திட்டம், மீளாய்வு செய்யப்பட்டு சர்வதேச பங்காளர்களின் பங்கேற்புடன் இந்த வருடம் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article