வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவர் சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டு, அவர்களுடன் உரையாடினர்.
வவுனியாவுக்கு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ, மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜூ ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ், பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோரே நேற்றைய தினம் சிறைக்கு சென்று மீனவர்களை சந்தித்தனர்.
எல்லை தாண்டியும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியும் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை அவர்கள் பார்வையிட்டதுடன், அவர்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் கேட்டறிந்தனர்.
வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த மீனவர்களை பார்வையிட இந்திய
மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர்.