மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டு தொடங்கின.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையில் 18.05.2023 இன்று நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திவேண்டி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது அரசியல் பிரமுகர்களும் மக்களும் பங்குகொண்டிருந்தனர்.