டெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் விவேக் ரகுவன்ஷி இந்திய சிபிஐயினால் தேசவிரோதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் இராணுவ இரகசியங்களை வெளிநாடுகளில் உள்ள புலனாய்வு அமைப்புக்களுக்கு பகிர்ந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர், இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் பிரபலம் பெற்றுவிளங்கிவந்தார்.
இந்நிலையில்,
அவர், இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு சார்ந்த விடயங்களைச் சேகரித்து வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களுக்கு பகிர்ந்ததாக டெல்லி பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்தே சிபிஐ அவரைக் கைது செய்துள்ளது. அதேவேளை அவருடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.