இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பிரிட்டன் தடை; கனடாவின் நீதியமைச்சர் வரவேற்பு!

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பிரிட்டன் தடை; கனடாவின் நீதியமைச்சர் வரவேற்பு!

editor 2

இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன்.

இலங்கையில் பொறுப்புக் கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை
முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா
தொடர்ந்து பாடுபடும் என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Share This Article