அதீத ஹெரோயின் பாவனையினால் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் மரணம்!

அதீத ஹெரோயின் பாவனையினால் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் மரணம்!

editor 2

ஊசி மூலமாக ஹெரோயின் போதைப்பொருளை அதீதமாக செலுத்திய இளைஞர் உயிரிழந்தார். நல்லூரைச் சேர்ந்த ஜெ.சுகன்யன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, குறித்த இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார்.

மறுநாள் திங்கட்கிழமை அவர் மயக்கநிலையில் கிடந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இளைஞரின் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியமையாலேயே மரணம் சம்பவித்ததாக உடற்கூற்று
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article