கொழும்பில் பணிபுரிந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏழு மாதங்களாகக் காணவில்லை என்று தெரிவித்துள்ள அவருடைய தாயார் ஊடகங்கள் ஊடாக மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மயிலிட்டியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் (வயது 29) என்ற இளைஞர் கொழும்பில் புறக்கோட்டைப் பகுதியில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு 10ஆம் மாதம் அவர் காணாமல் போனமை தொடர்பில் அவருடைய தாயார் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
குறித்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவந்தவர் என்றும் தெரிவித்துள்ள அவருடைய தாயார், பொலிஸில் முறைப்பாடு செய்து 07 மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர மக்கள் முன்வர வேண்டும் என்றும் ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரைப் பற்றித் தகவல் தெரிந்தவர்கள்,
0775988204, 0775547218 ஆகிய தொலைபேசி இலகங்களில் தொடர்புகொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.