அதிகளவிலான வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கான காரணங்கள் வெளியாகின!

அதிகளவிலான வேட்புமனுக்கள் நிராகரிப்புக்கான காரணங்கள் வெளியாகின!

editor 2

பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தில் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை பூர்த்தி செய்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதார ஆவணங்கள் இல்லாமையாலேயே கணிசமான எண்ணிக்கையிலான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சமர்ப்பித்த பல வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக அந்ததந்த தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.

இவ்வாறு,

அதிக எண்ணிக்கையிலான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட 2017 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டம் இல.

17 இல் செய்யப்பட்ட புதிய திருத்தத்தின்படி வேட்புமனுவில் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவ சதவீதத்தை சேர்ப்பதற்கான புதிய விதிமுறைகள் பலரை குழப்பத்தில் ஆழ்த்தின.

திருத்தங்களின்படி,

ஒவ்வொரு வேட்புமனு பட்டியலிலும் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவம் கட்டாயம் தேவை. இதேநேரத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ பட்டியலில் 50 வீதம் பெண் வேட்பாளர்கள் இருக்க வேண்டும்.

இளைஞர் பிரதிநிதித்துவத்தின் வயதைக் குறிப்பிடுவதற்கு சான்றளிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் ஒவ்வொரு பட்டியலிலும் சேர்க்கப்பட வேண்டும்.

பலர் அவற்றை சேர்க்கத் தவறிவிட்டனர் அல்லது அதனை சரியான முறையில் அவற்றை இணைக்கவில்லை.

இந்தப் பட்டியல்களை சமர்ப்பிப்பதற்கு போதுமான நேரம் இருந்தபோதிலும் அனைவரும் கடைசி நிமிடத்தில் அவற்றை சமர்ப்பித்தனர்.

வேறு வழியில்லாமல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

02 ஆயிரத்து 900 வேட்பு மனுக்களில் 400 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இது விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் எதுவும் செய்ய முடியாது. சட்ட தலையீட்டை நாடுவது விண்ணப்பதாரர்களின் பொறுப்பு – என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share This Article