வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள், ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
பெயரை வெளிப்படுத்த விரும்பாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.