யாழ்ப்பாணத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன இருவர் தமிழக கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
குறித்த மீனவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக் கொண்டிருந்ததை அவதானித்த தமிழக கடலோர காவல்துறையினர் குறித்த இரு மீனவர்களையும் மீட்டுள்ளனர்.
மேலும், இரு மீனவர்களையும் மீட்ட கடற்பகுதியில் மூட்டை ஒன்றிலிருந்து கஞ்சா பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், அவர்கள் இருவரும் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்தார்களா எனும் சந்தேகத்துடன் தமிழக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.