வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவை மூடப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், படையினரின் வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன் கட்டம்கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் பெருந்தோட்ட மக்களும் அரசாங்கத்துக்கு விசேட ஆணை வழங்கியுள்ளார்கள். ஆகவே, அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே செயல்படுகிறோம். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும் இராணுவத்தையே அழைக்கிறோம். ஆகவே, முப்படையின் சேவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது’, என்றார்.