கொட்டாஞ்சேனை கொலை; சந்தேக நபர்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மரணம்!

கொட்டாஞ்சேனை கொலை; சந்தேக நபர்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் மரணம்!

editor 2

கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை –  கொட்டாஞ்சேனை வீதியில் நேற்றிரவு உந்துருளியில் பிரவேசித்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Article