கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக்கொலை; சந்தேக நபர் கைது!

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக்கொலை; சந்தேக நபர் கைது!

editor 2

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் வயது 37 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்திற்கு பொலிஸார விரைந்துள்ள நிலையில் அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Article