வாக்காளர்கள் கொண்டு செல்லவேண்டிய ஆவணங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை!

வாக்காளர்கள் கொண்டு செல்லவேண்டிய ஆவணங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை!

editor 2

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆளடையாள ஆவணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாக்காளர்கள் தங்களது ஆளடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்வது கட்டாயமாகும்.

செல்லுபடியாகும் ஆளடையாள ஆவணங்கள் பின்வருமாறு ;

  1. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டை
  2. செல்லுபடியான கடவுச்சீட்டு
  3. செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்
  4. ஓய்வூதிய திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் ஓய்வூதிய அடையாள அட்டை
  5. முதியோர் அடையாள அட்டை
  6. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மதகுருமார்களுக்காக அடையாள அட்டை
  7. தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
  8. தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் விசேட தேவையுடையோருக்கான தற்காலிக அடையாள அட்டை
  9. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைத் தகவல்களை உறுதி செய்யம் கடிதம்
  10. மோட்டார் வாகன திணைக்களத்தினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்

Share This Article