யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
