மின் தடைக்கு சூரியசக்தி மின்சாரமே காரணம் – மின்சாரசபை அறிக்கை!

மின் தடைக்கு சூரியசக்தி மின்சாரமே காரணம் - மின்சாரசபை அறிக்கை!

editor 2

சூரியசக்தி மூலமாகக் கிடைத்த அதிக மின்சாரமே நாடளாவிய ரீதியில் மின் தடைக்குக் காரணமாக அமைந்தது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி சுமார் 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இத்தகைய நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் குறுகிய – நீண்டகால தீர்வுகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், சூரிய மின்னுற்பத்தி மூலம் கிடைத்த அதிக மின்சாரத்தால் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையில் சமநிலையின்மை ஏற்பட்டது. இது ஒட்டுமொத்த மின் தடைக்கு காரணமாக அமைந்தது – என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாது தவிர்ப்பதற்கு சில மின்னுற்பத்தி இயந்திரங்களை குறைந்த இயக்க மட்டத்தில் பேணுதல், சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு தேவை ஏற்படும்போது, குறைந்த கேள்வி நிலவும் காலங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தியை குறைத்தல் என்பன பரிந்துரைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Share This Article