நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் வெட்டு தற்போது சில பகுதிகளுக்கு வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம, சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கியமான இடங்களுக்கு மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகத்தை சீர்செய்ய அதிகாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.