நாடு முழுவதும் மின்தடை!

editor 2

தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மையால் தற்போது நாடளாவிய ரீதியில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்பகல் 11.23 மணி அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.

மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையம் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Share This Article