முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் வீட்டுக் கிணற்றில் மிதந்த நிலையில் நேற்று மாலை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த, 28 வயதான பிலிப்குமார் டினோஜன், கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.
அதன் பின்னர், அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டபோதும், அவர் கிடைக்க வில்லை. இந்த நிலையில் நேற்று குறித்த இளைஞனின் வீட்டு கிணற்றில் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது.