மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை!

Editor 1

நாட்டில் குற்றச்செயல்கள் குறித்து விரிவான விசாரணைகளை
மேற்கொள்வதற்காக மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது
பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக அந்தப் பிரிவுகளை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

தென் மாகாணத்தில் ஏற்கனவே இதுபோன்ற பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசாரணைகளை நெறிப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும்,

சில விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி
மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.

Share This Article