குருநகர் மீனவர் திடீர் உடல் நலக்குறைவால் கடலில் மரணம்!

Editor 1

யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். இதன்போது குருநகர் பகுதியை சேர்ந்த அல்போன்சோ சந்தியாப்பிள்ளை (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு மீனவர்கள் நேற்று முன்தினம் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில், ஒரு மீனவருக்கு நேற்று உடல் சுகயீனம் ஏற்பட்டது. அவரை ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This Article