தலைமன்னாருக்கு வடக்காக உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் எண்மரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை கைதான குறித்த 8 மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த மீனவர்கள் எண்மரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.