இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம்; இந்திய ஊடகங்கள் மத்தியில் பதற்றம் என்கிறது சீன ஊடகம்!

Editor 1

இலங்கைஜனாதிபதியின் சீனாவிஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்றுநோக்குவது, அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது,அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என கருதிவந்துள்ளனர், என சீனாவின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் குளோபல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க எதிர்வரும் 14ம் திகதி முதல் 17 திகதி முதல் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனசீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்ஹ_வா சுன்யிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அனுரகுமாரதிசநாயக்க சீனாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயம் இது. இந்த விஜயம் சீனா இலங்கை உறவுகளிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1957 இல் இரண்டு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இரண்டு நாடுகளும் நீண்டகால நண்பர்களாக அயலவர்களாக விளங்குகின்றன.

மாறிவரும் சர்வதேச இராஜதந்திர சூழ்நிலைகளை எதிர்கொண்டு இரண்டு நாடுகளினதும் உறவுகள் வலுவானதாக விளங்குகின்றன,எப்போதும் நிலையான உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளன ,வெவ்வேறு அளவிலான இரண்டு நாடுகள் எவ்வாறு சிறந்த நட்புறவையும் பரஸ்பரம் இரண்டு நாடுகளிற்கும் நன்மையளிக்க கூடிய ஒத்துழைப்பையும் பேண முடியும் என்பதற்கு சீன இலங்கை உறவுகள் உதாரணமாக உள்ளன என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் எதிர்வரும் விஜயத்தின் மூலம் காலத்தினால் கௌரவிக்கப்பட்ட உறவை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும்,பரஸ்பர அரசியல் நம்பிக்கையை ஆழமாக்குவதற்கும், புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும், சீனா தயாராக உள்ளது என அதன் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக திசநாயக்க பதவியேற்ற பின்னர் அவர் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள முதலாவது விஜயம்,இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.குறிப்பாக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ்.

இலங்கை மூலோபாய அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் அமைவிடத்தில் உள்ளதுடன் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் முக்கிய சகாவாக மாறியுள்ளது.இது ஏற்கனவே இரண்டு நாடுகளிற்கும் நன்மைகளை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முன்முயற்சிகளுடன் சிறப்பாக இணைவதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக சீனத்தலைவர்களுடன் ஈடுபாட்டை பேணுவதை இலங்கை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது என ஹ_ ஜியோங்

குளோபல் டைம்சிற்கு தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதியின் இந்த விஜயம் குறித்து இந்திய ஊடகங்கள் அதிக கவனத்தை செலுத்தியுள்ளன,இந்தியாவிற்கான விஜயத்தை தொடர்ந்தே இலங்கை ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

புதிய பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் உயர்தர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை இலங்கை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் சீனாவிஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்றுநோக்குவது, அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது, அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என கருதிவந்துள்ளனர்,ஆனால் இந்த நாடுகளின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு வலுவான ஆதரவை வழங்க தவறியுள்ளன.

இதேவேளை அந்த பிராந்தியத்தில் சீனாவினது செல்வாக்கோ அல்லது வேறு எந்த நாட்டினது செல்வாக்கோ அதிகரிப்பதை இந்திய ஊடகங்கள் விரும்பவில்லை.அவர்கள் கடன்பொறி மற்றும் சீனா அச்சுறுத்தல் போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துவது இதனை வெளிப்படுத்துகின்றது என ஹியு தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள பலநாடுகள் வெளிஅழுத்தங்களை தவிர்த்து தற்போது சுயாதீன வெளிவிவகார கொள்கைகளை பின்பற்றுகின்றன.

Share This Article