பிரபல எழுத்தாளர் அந்தனி ஜீவா காலமானார்!

Editor 1

பிரபல எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான அந்தனி ஜீவா தமது 80 வயதில் காலமானார். 

அவர், 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். 

கொழும்பில் உள்ள பாடசாலைகளில் தமது ஆரம்ப கல்வியை கற்ற அவர், நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்தார். 

அந்தனி ஜீவா, மலையக இலக்கியங்கள் தொடர்பில் ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 

அவர், மலையக இலக்கியங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், இலக்கியங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். 

அத்துடன், நாடகத்துறையில் நாட்டம் கொண்ட அவர், பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளதுடன், பல மேடை மற்றும் வீதி நாடகங்களையும் அரங்கேற்றியுள்ளார். 

அந்தனி ஜீவாவின் மறைவுக்கு பல்வேறு தரப்புகள் இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றன. 

அந்தனி ஜீவாவின் பூதவுடல் இன்று பிற்பகல் கல்கிசையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டு நாளைய தினம் பிற்கபல் 3 மணியளவில் கிருலப்பனை – பூர்வாராம பொதுமயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி கிரியை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article