மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு ஏற்ப நேற்று மேற்கொள்ள திட்டமிடப்
பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த முறை மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 325 ரூபாவாகவும் உள்ளது.
95 ஒக்ரேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 341 ரூபாவாகவும், 92 ஒக்ரேன்
பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 293 ரூபாவாகவும் உள்ளது.
இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 178 ரூபாவாக மாற்றமின்றி காணப்படுகிறது.