சம்பிக்க ரணவக்கவின் வெளிநாட்டுத் தடை தற்காலிக நீக்கம்!

Editor 1

2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாட்டலி சம்பிக்க ரணவக்க தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதாக, அவரது சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர். 

இதற்கமைய, பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் அவர்கள் கோரியிருந்தனர். 

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பாட்டலி சம்பிக்க ரணவக்கவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளது.

Share This Article