இந்தியாவில் சிவப்பு பச்சை அரிசி கிடைக்காததால், அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக வர்த்தக விவகார, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க
தெரிவித்தார்.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க சிவப்பு பச்சை அரிசியை இறக்குமதி செய்ய இந்திய தூதரகம் மற்றும் இந்திய விநியோகஸ்தர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள ஆலைகளிலும் சிவப்பு பச்சை அரிசி கிடைக்கவில்லை என அவர்
கூறினார்.
எனினும் நிலைமையை எப்படியாவது சமாளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.