நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மதுவரி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு கட்டங்களின் கீழ் திருத்தப்பட்டுள்ளது.
சராசரியாக மதுபான போத்தல் ஒன்றின் விலை 6 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று முதல் அமுலாகும் வகையில் சிகரெட் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 4 கட்டங்களின் கீழ் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாயினாலும், 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.