பொலிஸார் எனக் கூறி கோண்டாவிலில் வழிப்பறி!

Editor 1

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் எனக் கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்துக்கு அருகில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை நின்ற இருவர் வீதியில் வந்த நபரை வழிமறித்து ,தம்மை பொலிஸார் என கூறி அவரது உடைமைகளைச் சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது அவரது உடைமையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமெராக்களின் உதவியுடன் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This Article