க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்து தொடர்பில் அமுலான சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் காரணமாகப் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று பிற்பகல் பதில் காவல்துறை மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற பாகங்களை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட நிவாரண காலத்தை 3 மாத காலத்திற்கு நீடிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையிலேயே தாங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடத் தீர்மானித்ததாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.