இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்கா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்கத் தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்ச்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டதுடன் அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் இந்த சதிப்பில் ஆராயப்பட்டது.
இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்கா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும் என அமெரிக்க தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.