யூதர்கள் இலங்கையில் வழிபாட்டுத் தலங்களை அமைக்க அனுமதி வழங்கவில்லை – பிரதமர்!

Editor 1

யூதர்கள் இலங்கையில் தங்கள் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பௌத்தசாசன அமைச்சோ, அல்லது அதன் திணைக்களங்களோ இதற்கான அனுமதியை வழங்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த வழிபாட்டுநிலையங்களிற்கு அனுமதி வழங்கவில்லை, இந்த விடயத்தில் நாங்கள் விரைவில் தலையிடுவோம், என தெரிவித்துள்ள பிரதமர் எனினும் அறுகம் குடா விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம், இது சுற்றுலாப்பயணிகள் குறித்த நாடொன்றின் கடப்பாடு,என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article