கனடாவில் பணிப்புரியும் வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படத்தியுள்ளது.
குறித்த சடலமானது நேற்றையதினம் (4) கனடா பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் பயணித்த காரின் கதவுகள் திறக்கப்படாததால் காருக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, செட்டிகுளம், வீரபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட 21 வயதுடைய ஜேக்கப் நெவில் டிலக்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் உயிரிழந்த காரை பரிசோதித்த பொலிஸாரும் இதே முடிவிலேயே இருப்பதாகவும், உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் பூரண மருத்துவ பரிசோதனையை முன்னெடுக்குமாறு, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்