ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக் கட்சிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டி!

Editor 1

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா – கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article