தமது சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3,690 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது
5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 1,482 ரூபாயுக்கும் 2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 694 ரூபாயுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.