பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளையும் ஆராய்ந்து அவற்றைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
உயர்கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதி உரியமுறையில் பயன்படுத்தப்படல் வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.