சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதன் காரணமாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக மஹிந்த சமரசிங்கவே தொடர்ந்து பதவி வகிப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 16 பேரைத் திருப்பியழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில், மஹிந்த சமரசிங்கவும் கடந்த அரசாங்கத்தினால் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டவராவார்.
இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதன் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவராக மஹிந்த சமரசிங்கவே தொடர்ந்து பணியாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.