நெடுந்தாரகைப் படகின் நங்கூரத்தினைக் காணவில்லை!

நெடுந்தாரகைப் படகின் நங்கூரத்தினைக் காணவில்லை!

editor 2

நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் நேற்று வெள்ளிக்கிழமை (03) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து நிறுத்துவதற்காக இந்த படகு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல்போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுந்தாரகைப் படகானது குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு வரையான பயணிகள் போக்குவரத்து சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article