மின்சாரம் தாக்கி வவுனியாவில் ஒருவர் மரணம்!

மின்சாரம் தாக்கி வவுனியாவில் ஒருவர் மரணம்!

editor 2

வவுனியா குடியிருப்பில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா குடியிருப்பு விநாயகர் ஆலயத்தின் தீர்த்தக் கேணியை மின்சாரத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந் திரங்களின் மூலம் நீரினை அகற்றி துப்புரவு செய்யும் போது குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் த.காந்தரூபன் வயது 49 என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share This Article